‘எல்.முருகனுக்கு எதிராக’ கமல்ஹாசன் களமிறக்கும் வேட்பாளர் இவர் தான்!

 

‘எல்.முருகனுக்கு எதிராக’ கமல்ஹாசன் களமிறக்கும் வேட்பாளர் இவர் தான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, ச.ம.க மற்றும் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளுடன் இணைந்து களம் காணுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

‘எல்.முருகனுக்கு எதிராக’ கமல்ஹாசன் களமிறக்கும் வேட்பாளர் இவர் தான்!

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் 24 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ஆயிரம்விளக்கு – கே.எம்.சரீப், ராயபுரம் – குணசேகரன், தொண்டமுத்தூர் – ஷாஜகான், உடுமலைப்பேட்டை- ஸ்ரீநிதி, திருவாரூர்- கபில் அரசன், பவானிசாகர் – கார்த்திக் குமார், செய்யூர் – அன்பு தமிழ்சேகரன், வந்தவாசி – சுரேஷ், தாராபுரம் – சார்லி, கரூர் – மோகன்ராஜ், வானூர்- சந்தோஷ்குமார், பாபநாசம் – சாந்தா, ஒரத்தநாடு – ரங்கசாமி, மன்னார்குடி – அன்பானந்தம், மதுராந்தகம் – தினேஷ், கீழ்பெண்ணாத்தூர்- சுகானந்தம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

‘எல்.முருகனுக்கு எதிராக’ கமல்ஹாசன் களமிறக்கும் வேட்பாளர் இவர் தான்!

இந்த பட்டியலில் முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது 2 தொகுதிகள். ஒன்று ஆயிரம் விளக்கு, மற்றொன்று தாராபுரம். மநீம சார்பில் கே.எம்.சரீப் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்புவும், திமுக சார்பில் எழிலனும் போட்டியிடுகிறார்கள். மநீம சார்பில் சார்லி போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.