வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம்!

 

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் களம் சூடு பிடித்திருப்பதை போன்று, புதுச்சேரி அரசியல் களமும் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி கவிழ்ப்பு, கூட்டணிக் கட்சிகள் மோதல் என பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் அங்கு தேர்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் போட்டியிடும் பெரும்பாலான கட்சிகள் புதுச்சேரியிலும் களம் காணுகின்றன.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம்!

அந்த வகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுசி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து புதுச்சேரி தேர்தலை சந்திக்க உள்ளன. இக்கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நேற்று செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த புதுச்சேரி மநீம மாநிலச்செயலாளர் சந்திரமோகன், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம்!

அதன் படி புதுச்சேரியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், ராஜ்பவன்- பர்வத வர்தினி, இந்திரா நகர்- சக்திவேல், நட்டப்பாக்கம்- ஞானஒளி, முதலியார்பேட்டை – ஹரிகிருஷ்ணன், நெல்லித்தோப்பு – முருகேசன், காமராஜ் நகர் – லெனின், லாஸ்பேட்டை – சத்தியமூர்த்தி, காலாபேட்டை – சந்திரமோகன், அரியாங்குப்பம் – ருத்ர குமார், தட்டாஞ்சாவடி- ராஜேந்திரன், வில்லியனூர் – பானுமதி, ஒழுக்கரை- பழனிவேல், திருபுவனை – ரமேஷ், ஓபுலம்- சந்தோஷ் குமார், உருளயன்பேட்டை- சக்திவேல், எம்பளம் – சோம்நாத், நெடுங்காடு – நரசிம்மன், கதிர்காமம் – சதானந்தம் போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.