சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பாக போட்டியிட பிப். 21 முதல் விருப்ப மனு விநியோகம்!

 

சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பாக போட்டியிட பிப். 21 முதல் விருப்ப மனு விநியோகம்!

மக்கள் நீதி ம‌ய்ய தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. அதேபோல் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கவில்லை.

சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பாக போட்டியிட பிப். 21 முதல் விருப்ப மனு விநியோகம்!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே ‘ப்ளாக்செயின்’ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விருப்ப மனுக்களை பெறும் கட்சி என்பதில் பெருமை அடைகிறோம். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட பிப். 21 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். maiam.com மூலமாகவும் விருப்ப மனுக்களை அளிக்கலாம், ஒரு தொகுதிக்கு ஒரு முறை விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.25 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கட்சியின் தேர்தல் செலவினத்திற்காக பயன்படுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.