டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனுதாக்கல்

 

டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனுதாக்கல்

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019 ஆம் ஆணு நடைபெற்ற மக்களவை தேர்தலில் டார்ச் லைட்சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், அச்சின்னத்தை முன்னிறுத்தி மக்கள் நீதி மய்ய கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னட்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. மாறாக தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனுதாக்கல்

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு தாக்கல் செய்துள்ளது.
1968-ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்தல் சட்டப்பிரிவின் படி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.