“கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர்” சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக அரசை கடுமையாக சாடும் கமல் ஹாசன்

 

“கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர்” சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக அரசை கடுமையாக சாடும் கமல் ஹாசன்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசார் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் பிணமாக தான் வெளியில் வந்தார்கள். இந்தக் சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர்” சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக அரசை கடுமையாக சாடும் கமல் ஹாசன்

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும்,அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது.
இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம்.

அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூடஉண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

“கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர்” சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக அரசை கடுமையாக சாடும் கமல் ஹாசன்

நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால்இரண்டு கைதிகளை, காவல் நிலையத்தில் இருந்து, சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்? எத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும்? அந்த உண்மைகளை ஆராயாமல், பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்கு புரியவில்லையா? அல்லது இது போதும் என்று அரசு நினைக்கிறதா? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர்,கடந்து விடக் கூடாது.

நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையை செய்தவர்கள், அதற்குத் துணை நின்றவர்கள், கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இதை மறைக்க முயன்றவர்கள் என பலருக்கு இந்த கொலையில் பங்குண்டு.

இரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையைச் சுத்தம் செய்ய அரசு என்ன செய்ய போகிறது? இவை அனைத்திற்கும் மேலாக காவல்துறையின் கொலைகளை, கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும் இதில் முதல் குற்றவாளிகள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை செயல்படுத்தும் கரமாக காவல்துறை செயல்பட்டு 13 உயிர்களை குடித்தது. அதற்கு எவர் மீதும் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை. அரசும் அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பையும், உரிமைகளையும் காற்றில் பறக்க விட்டது. இப்போது அதே காவல் துறையின் கரங்கள் இரண்டு உயிர்களைக் குடித்து விட்டு வந்து
நிற்கிறது.

“கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர்” சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக அரசை கடுமையாக சாடும் கமல் ஹாசன்

அரசு தன் விசுவாசமான கரத்தைக் காக்கும் செயலை செய்யப் போகிறதா? அல்லது சரியானதைச் செய்ய போகிறதா? காவல் துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து, உயிரிழப்புகளின் போது பெயரளவில் நடவடிக்கை எடுத்து அமைதி காக்கும் அரசு, அரச பயங்கரவாதத்தை, அனுமதித்து,
ஆதரித்து, வளர்த்து வருகிறது. மக்களாட்சி என்பதை மறந்து அதிகாரத்தை, ஆதிக்கத்தை, அநீதியை மக்கள் மேல் இந்த அரசு தொடர்ந்து கட்டவிழ்க்கிறது.
மக்களின் உயிரை, உணர்வை, உரிமைகளை, சட்டத்தை மதிக்காத அரசு அகற்றப்பட
வேண்டும். சட்டம் மக்களுக்கானது, மக்களைக் காப்பதற்கு எனும் போது, நீதித்துறை மக்களுடன் நிற்க வேண்டும். தன் கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர், கொரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடிகளை நாடுகிறார்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.