“கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இல்லை” – கமல்ஹாசன்

 

“கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இல்லை” – கமல்ஹாசன்

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கழகங்களுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைக்காத கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளவிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

“கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இல்லை” – கமல்ஹாசன்

அதில் கொரோனா பாதிப்பின் காரணமாக 40 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் விதமாக மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் கமல்ஹாசன். நேற்று நடந்த கூட்டத்தில் கூட்டணி மற்றும் களப்பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், மக்களுடன் தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கப்போவதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

“கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இல்லை” – கமல்ஹாசன்

இந்த நிலையில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், 3ஆவது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.