தினமும் இந்த 3 பொருட்களை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!

 

தினமும் இந்த 3 பொருட்களை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!

நம் உணவில் தினசரி இருக்க வேண்டிய விஷயங்கள் 3 உள்ளது.  முதலில் வெங்காயம் . வெங்காயம் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் சின்ன வெங்காயம்  உடல் ஆரோக்கியத்தை கூட்டும்.  சின்ன வெங்காயம் என்று அழைக்கப்படும் சாம்பார் வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். தென்னிந்திய சமையலில் சின்ன வெங்காயம் மிகமுக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு 10 சின்ன வெங்காயத்தை   பச்சையாக சாப்பிடவேண்டும்.  வெங்காயத்தை வேக வைத்தால் அதன் பயன் ஒரு 50 சதவீதம் குறைந்துவிடும்.

தினமும் இந்த 3 பொருட்களை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!

பச்சை வெங்காயத்தை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி தயிர் கலந்து அதை பச்சடியாக சாப்பிட்டு வரலாம். தினந்தோறும் ஒரு சிறிய கப்பில் தயிர் பச்சடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இரண்டாவது வெள்ளைப்பூண்டு.  வெள்ளை பூண்டு நோய் தடுப்புக்கு உறுதுணையாக உள்ளது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.

தினமும் இந்த 3 பொருட்களை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!

வெள்ளையணுத்திறனின் செயல்பாடுகளை வெள்ளைப்பூண்டு அதிகரிக்கும். அத்துடன் ஊளை சதையை வெள்ளைப்பூண்டு கரைக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வெள்ளைப்பூண்டு மாதவிடாய் பிரச்னைக்கும் மருந்தாக பயன்படுகிறது. வெள்ளைப் பூண்டை வேகவைத்து தான் சாப்பிடவேண்டும். வெள்ளை பூண்டை பச்சையாக சாப்பிடக்கூடாது . தினமும்  10 வெள்ளைப்பூண்டு பற்களை எடுத்துக்கொண்டு அதை வேகவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் வாய்வு தொல்லை நீங்கும்.

தினமும் இந்த 3 பொருட்களை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!

அடுத்த பொருள் வெந்தயம். வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடி வளர்ச்சியை தருகிறது. குளிர்ச்சி தன்மை கொண்ட வெந்தயம் சிறுநீரை பெருக்கும். விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியை கூட்டுவதுடன், நரம்புகளை பலப்படுத்தும். வெந்தயத்தை இளஞ்சூட்டில் வறுத்து, நீர் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று கடுப்பு நீங்கும்.

தினமும் இந்த 3 பொருட்களை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!

தினமும் 5 முதல் 10 கிராம் வெந்தயம் எடுத்து கொள்ள வேண்டும்.  அசைவ உணவுகளில் அதிக அளவு நார்ப்பொருள் இருக்கக்கூடிய ஒரே உணவு வெந்தயம். ஆஸ்துமா, மூக்கடைப்பு ,சளி இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள்  வெந்தயத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம்