தடுப்பூசி போட்டாலும் ஏன் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்? – ஆய்வில் வெளியான மிக முக்கிய தகவல்!

தடுப்பூசி போட்டாலும் ஏன் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்? – ஆய்வில் வெளியான மிக முக்கிய தகவல்!

தடுப்பூசி போட்டுக்கொண்டும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் சொல்லும் மிக முக்கிய காரணம். அவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பின் தீவிரம் குறையும் என்று எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். உயிரிழப்பும் ஏற்படாது என்று கூறினாலும் அவர்கள் அதை ஏற்க மறுப்பார்கள். இவர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தினமும் புதுப்புது ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

தடுப்பூசி போட்டாலும் ஏன் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்? – ஆய்வில் வெளியான மிக முக்கிய தகவல்!

தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் மிக முக்கியமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏன் மீண்டும் கொரோனா (Breakthrough Cases) ஏற்படுகிறது என்ற ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் தடுப்பூசி திட்டத்திற்குப் பின் (Post Vaccination) மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஆய்வு இதுவாகும். மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் மாதிரிகள் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

Delta Plus variants less than 1% of coronavirus genomes - The Hindu

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 677 பேரின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்பின் தீவிரம் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தவிர்க்கப்படுகிறது என்றும், உயிரிழப்புகள் பெருமளவு குறைகிறது எனவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, 86 சதவீதம் பேர் உருமாற்றமடைந்த அபாயகரமான டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே.

தடுப்பூசி போட்டாலும் ஏன் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்? – ஆய்வில் வெளியான மிக முக்கிய தகவல்!

ஆனால் இதில் மகிழ்ச்சியளிக்கக் கூடிய தகவல்களும் உண்டு. அதாவது இவர்களில் 9.8 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அதேபோல 0.4 என்ற அளவில் உயிரிழப்பு சதவீதம் இருக்கிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உருவான நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாண்டி டெல்டா அவர்களைத் தாக்கியிருப்பது கவலையளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

தடுப்பூசி போட்டாலும் ஏன் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்? – ஆய்வில் வெளியான மிக முக்கிய தகவல்!

ஏற்கெனவே ஜீனோம் ஆராய்ச்சியில் இந்த வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய வைரஸை விட 50% அதிவேகமாகப் பரவக் கூடியது என்றும், நுரையீரல் செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனால் தான் இது நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றும் (immune escape) அபாயகரமான வைரஸ் என்று சொல்லப்படுகிறது.