• February
    28
    Friday

Main Area

Main



விற்பனை குறைந்ததால் கார் தயாரிப்பை 17 நாட்கள் ரத்து செய்யும் மகிந்திரா நிறுவனம்

மகிந்திரா வாகனங்கள்
மகிந்திரா வாகனங்கள்

கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் வாகன விற்பனை நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. விற்பனை குறைந்ததால் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கையிருப்பு அதிகரித்தது. இதனை தவிர்க்க தயாரிப்பை நிறுவனங்கள் குறைத்தன. அதேசமயம் விற்பனை நிலவரம் மிகவும் மோசமாக சென்றதால் பல நிறுவனங்கள் தங்ளது ஆலைகளில் வேலையில்லா நாட்களை அறிவித்தன.

மகிந்திரா அண்டு மகிந்திரா

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி, டாடா மோட்டார்ஸ் போன்றவையும் வேலையில்லா நாட்களை அறிவித்தன. இந்நிலையில் மகிந்திரா நிறுவனமும், தயாரிப்பு சரிசெய்தல் மற்றும் விற்பனையை கருத்தில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தனது வாகன தயாரிப்பு ஆலைகளில் 8 முதல் 17 நாட்கள் வரை தயாரிப்பு இல்லா (வேலையில்லாத) நாட்களை மேற்கொள்ள இருப்பதாக பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

வாகன தயாரிப்பு ஆலை

இதற்கு முன் கடந்த மாதம் 9ம் தேதி பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த காலாண்டில் 8 முதல் 14 நாட்கள் வரை மட்டுமே வேலையில்லா நாட்களை மேற்கொள்வதாக மகிந்திரா நிறுவனம் தகவல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மேலும் 3 நாட்கள் வேலையில்லா நாட்களை கடைப்பிடிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருப்பது சந்தையில் வாகன விற்பனை படுமோசமாக உள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.