மும்பையில் கொரோனா பரவ காரணம் என்ன?… ஒரே ஒரு போட்டோ.. எளிதாக புரிய வைத்த ஆனந்த் மகிந்திரா

 

மும்பையில் கொரோனா பரவ காரணம் என்ன?… ஒரே ஒரு போட்டோ.. எளிதாக புரிய வைத்த ஆனந்த் மகிந்திரா

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் மும்பையில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை ஒரே போட்டா வாயிலாக உணர்த்தி விட்டார் ஆனந்த் மகிந்திரா.

மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான மகிந்திரா குழுமத்தை கட்டி காக்கும் ஆனந்த் மகிந்திரா தொழிலதிபர் என்பதை தாண்டி மிகவும் வித்தியாசமானவர் மற்றும் மிகவும் மனிதநேயம் கொண்ட நல்ல மனிதர். எவ்வளவு பணிகள் இருந்தாலும் டிவிட்டரில் மிகவும் பரபரப்பாக இருப்பவர். தன்னை பின்தொடருபவர்கள் கூறும் எந்தவொரு ஆலோசனைகளையும் சிறிது அளவும் ஈகோ இல்லாமல் ஏற்று கொள்பவர். மேலும் தன்னை ஆச்சரியப்படுத்திய தகவல்களையும் தவறாமல் டிவிட்டரில் பதிவு செய்து விடுவார். இதனால் இவருக்கு என்றே டிவிட்டரில் தனி ரசிகர்கள் உள்ளனர்.

மும்பையில் கொரோனா பரவ காரணம் என்ன?… ஒரே ஒரு போட்டோ.. எளிதாக புரிய வைத்த ஆனந்த் மகிந்திரா
ஆனந்த் மகிந்திரா

இந்நிலையில் மும்பையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவதற்கு என்ன காரணம் என்பதை ஆனந்த் மகிந்திரா ஒரே போட்டோ மூலம் உணர்த்தி விட்டார். ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் ரயிலில் தூங்கும ஒரு மனிதரின் போட்டோவை பதிவேற்றம் செய்து, மும்பையில் அண்மையில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்தன் பின்னணியில் உள்ள காரணங்களை நீங்கள் தேடத் தொடங்கும் போது.. (இந்த ஒரு ஜூகாத், எந்தவொரு கைதட்டலுக்கும் (பாராட்டுக்கும்) தகுதியற்றவர்) என்று பதிவு செய்து இருந்தார். ஜூகாத் என்பதற்கு தோரயமாக புத்திசாலிதனமாக சட்டத்தை மீறுபவர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மும்பையில் கொரோனா பரவ காரணம் என்ன?… ஒரே ஒரு போட்டோ.. எளிதாக புரிய வைத்த ஆனந்த் மகிந்திரா
கொரோனா வைரஸ்

அந்த போட்டோவில், லோக்கல் ரயிலில் ஒருவர் மூக்கு மற்றும் வாய் பகுதியை மறைப்பதற்கு மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒளி தன் கண்ணில் தூக்கம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக கண்ணை மறைக்க பயன்படுத்தியுள்ளார். இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை வருத்தத்துடன் ஆனந்த் மகிந்திரா சொல்லாமல் சொல்லியுள்ளார்.