ஷாக் கொடுத்த மகிந்திரா நிறுவனம்… ரூ.3,255 கோடி நஷ்ட கணக்கு காட்டிய மகிந்திரா

ஷாக் கொடுத்த மகிந்திரா நிறுவனம்… ரூ.3,255 கோடி நஷ்ட கணக்கு காட்டிய மகிந்திரா

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.3,255 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.969.20 கோடி ஈட்டியிருந்தது.

ஷாக் கொடுத்த மகிந்திரா நிறுவனம்… ரூ.3,255 கோடி நஷ்ட கணக்கு காட்டிய மகிந்திரா

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாய் 35 சதவீதம் குறைந்து ரூ.9,005 கோடியாக குறைந்துள்ளது. அதே காலாண்டில் அந்நிறுவனத்தின் பயணிகள், வர்த்தக மற்றம் 3 சக்கர வாகனங்கள் விற்பனை ஒட்டு மொத்த அளவில் 47 சதவீதம் குறைந்து 86,351 வாகனங்களாக சரிவு கண்டுள்ளது.

ஷாக் கொடுத்த மகிந்திரா நிறுவனம்… ரூ.3,255 கோடி நஷ்ட கணக்கு காட்டிய மகிந்திரா

பொருளாதாரத்தில் தொடர்ச்சியான சரிவு, 2020 ஏப்ரல் 1ம் முதல் பி.எஸ்.6 வாகனங்களுக்கு மாற்றம் மற்றும் கோவிட்19 பரவல் மற்றும் அதனை தொடர்ந்து 2020 மார்ச் மாதத்தில் ஏழு நாட்கள் லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலாண்டில் விற்பனை சரிவு கண்டுள்ளதாக மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ரூ.2.35 வழங்க பரிந்துரை செய்துள்ளது.