”டிரியோ ஜோர்” எலக்ட்ரிக் லோடு ஆட்டோ – மகிந்திரா அறிமுகம்!

 

”டிரியோ ஜோர்” எலக்ட்ரிக் லோடு ஆட்டோ – மகிந்திரா அறிமுகம்!

டிரியோ ஜோர் என்ற மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர சுமை தூக்கும் வாகனத்தை மகிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”டிரியோ ஜோர்” எலக்ட்ரிக் லோடு ஆட்டோ – மகிந்திரா அறிமுகம்!

பிக்அப் வேன், டெலிவரி வேன் மற்றும் பிளாட் பெட் ஆகிய மூன்று வகைகளில் வெளிவரும் இந்த புதிய எலக்ட்ரிக் லோடு ஆட்டோவில், மொத்தம் 550 கிலோ வரை சுமை ஏற்ற முடியும் என மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வாகனத்தை பயன்படுத்தினால் எரிபொருள் செலவில், ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபி67 ரேட்டட் எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட இந்த வாகனத்தின் பேட்டரி, முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 125 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் என்றும் இதன் பேட்டரிகள் 1.5 லட்சம் கிலோ மீட்டர் வரையிலான ஆயுட்காலத்தை கொண்டது என்றும் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

”டிரியோ ஜோர்” எலக்ட்ரிக் லோடு ஆட்டோ – மகிந்திரா அறிமுகம்!

செல்போன் சார்ஜ் போடுவதை போல எளிமையாக 15ஏஎம்பி சாக்கெட்டில் இதை சார்ஜ் போடலாம் என கூறும் அந்நிறுவனம், பார்வார்ட், நியூட்ரல் மற்றும் ரிவர்ஸ் ஆகிய மூன்று வகை டிரைவிங் மோடுகள், ஜிபிஎஸ் வசதி என ஏராளமான கூடுதல் வசதிகளுடன் வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் மாதம் முதல் நாடெங்கிலும் உள்ள 140க்கும் அதிகமான மகிந்திரா நிறுவனத்தின் டீலர் மையங்களில் இந்த வாகனம் விற்பனைக்கு கிடைக்கும் என்றும், இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கு 3 வருட வாரண்டி உண்டு என்றும் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை 2.73 லட்சத்தில் ( டெல்லி ஷோரூம் விலை) தொடங்குகிறது.

”டிரியோ ஜோர்” எலக்ட்ரிக் லோடு ஆட்டோ – மகிந்திரா அறிமுகம்!
  • எஸ். முத்துக்குமார்