டிவிட்டரில் செல்வாக்கு மிக்க டாப் 10 தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் ஆனந்த் மகிந்திரா, சுந்தர் பிச்சை

 

டிவிட்டரில் செல்வாக்கு மிக்க டாப் 10 தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் ஆனந்த் மகிந்திரா, சுந்தர் பிச்சை

குளோபல் டேட்டா நிறுவனம் 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் டிவிட்டரில் செல்வாக்கு செலுத்திய டாப் 10 தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. டிவிட்டரில் தலைமை செயல் அதிகாரிகளின் செயல் திறன் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச அளவில் டாப் 10 தலைமை செயல்அதிகாரிகள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட 5 இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரிகள் இடம் பிடித்துள்ளனர்.

டிவிட்டரில் செல்வாக்கு மிக்க டாப் 10 தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் ஆனந்த் மகிந்திரா, சுந்தர் பிச்சை
ஆனந்த் மகிந்திரா

டிவிட்டரில் செல்வாக்கு மிக்க டாப் 10 தலைமை செயல் அதிகாரிகள்

  1. தீரஜ் பாண்டே (18,738 பாலோயர்ஸ்)
  2. எலோன் மஸ்க் (3.79 கோடி பாலோயர்ஸ்)
  3. டிம் குக் (1.20 கோடி பாலோயர்ஸ்)
  4. ஆனந்த் மகிந்திரா (80.73 லட்சம் பாலோயர்ஸ்)
  5. ஜாக் டோர்சே (47.71 லட்சம் பாலோயர்ஸ்)
  6. சுந்தர் பிச்சை (31.46 லட்சம் பாலோயர்ஸ்)
  7. சத்ய நாதெள்ளா (22.69 லட்சம் பாலோயர்ஸ்)
  8. மார்க் பெனியோஃப் (10.31 லட்சம் பாலோயர்ஸ்)
  9. மைக்கேல் டெல் (6.57 லட்சம் பாலோயர்ஸ்)
  10. தீபிந்தர் கோயல் (4.37 லட்சம் பாலோயர்ஸ்)