தொடரும் லாக்டவுன் தாக்கம்….. விற்பனையில் சரிவை சந்தித்த பஜாஜ், அசோக் லேலண்ட், சுசுகி மோட்டார்சைக்கிள்

தொடரும் லாக்டவுன் தாக்கம்….. விற்பனையில் சரிவை சந்தித்த பஜாஜ், அசோக் லேலண்ட், சுசுகி மோட்டார்சைக்கிள்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ், அசோக் லேலண்ட், சுசுகி மோட்டார்சைக்கிள் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவை சந்தித்துள்ளது. லாக்டவுன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

இரு சக்கர மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 3.56 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 9 சதவீதம் குறைவாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3.90 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

தொடரும் லாக்டவுன் தாக்கம்….. விற்பனையில் சரிவை சந்தித்த பஜாஜ், அசோக் லேலண்ட், சுசுகி மோட்டார்சைக்கிள்
பஜாஜ் வாகன தயாரிப்பு ஆலை

இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6,325 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 31 சதவீதம் குறைவாகும். அசோக் லேலண்ட் நிறுவனம் 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 9,230 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

தொடரும் லாக்டவுன் தாக்கம்….. விற்பனையில் சரிவை சந்தித்த பஜாஜ், அசோக் லேலண்ட், சுசுகி மோட்டார்சைக்கிள்
அசோக் லேலண்ட் வாகனங்கள்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 57,909 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மொத்தம் 71,629 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த மாதத்தில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை 19.15 சதவீதம் சரிவு கண்டுள்ளது.