வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்களுக்கு அனுமதியில்லை- காவல் ஆணையர்

 

வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்களுக்கு அனுமதியில்லை- காவல் ஆணையர்

சென்னை நுங்கம்பாக்கம் லாயோலா கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்களுக்கு அனுமதியில்லை- காவல் ஆணையர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் சட்டமன்றத் தேர்தலையொட்டி 23,500 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பரப்புரை முடிந்த பின் வெளியாட்கள் யாரும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும். சென்னையில் மட்டும் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 10 மையங்கள் மிகவும் பதற்றமானவை. வாக்குப்பதிவு மையங்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்கும் குழு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய சென்னை போலீசார் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் விதியை மீறி தேர்தல் பரப்புரை செய்தால் சைபர் பிரிவு கண்காணிக்கும். பொதுமக்கள் வாக்களிக்க தைரியமாக வர வேண்டும். அதற்கான முழு பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்துள்ளோம். 3000 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.