திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருடன் கமிஷ்னர் தேநீர் விருந்து!

 

திருடர்களை சேஸிங் செய்து மடக்கிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருடன் கமிஷ்னர் தேநீர் விருந்து!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வரும் திருடர்கள், செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுவருவது தொடர்கதையாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் உடைமைகளையும், நகைகளையும் இழக்கும் மக்கள், சில நேரம் உயிர்களையும் இழக்க நேரிடுகிறது

இந்த சூழலிலே சென்னையில் நடந்து சென்ற ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். இதைக்கண்ட மாதவரம் சப்-இன்ஸ்பெக்டர் அண்டிலின் ரமேஷ் கொள்ளையர்களை தனது பைக்கில் விரட்டி சென்றார். இதில் ஒருவர் தப்பிவிட, மற்றொருவன் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பி முயல, லாவகமாக மடக்கி பிடித்தார் துணிச்சல்மிக்க அந்த காவலர் ரமேஷ். இதனையடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இது திரைப்படத்தில் வரும் காட்சி இல்லை. எஸ்ஐ அண்டிலின் ரமேஷ் தனி ஒருவராக போராடி திருடர்களை பிடித்த காட்சி தான் இது என பாராட்டியிருந்தார். தொடர்ந்து அண்டிலின் ரமேஷை அழைத்து அவரை பாராட்டிய ஆணையர் மகேஷ்குமார், அவருக்கு தேநீர் விருந்து அளித்தார். தொடர்ந்து அண்டிலினின் துணிச்சலான செயலை பாராட்டி வெகுமதி வழங்கினார்.