திமுகவில் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு; என்ன தெரியுமா?

 

திமுகவில் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு; என்ன தெரியுமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் கடந்த ஜூலை மாதம் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட மகேந்திரன் திடீரென கட்சி தாவியது அரசியல் ரீதியாக உற்றுநோக்க பட்டது.

திமுகவில் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு; என்ன தெரியுமா?

திமுகவில் இணைந்த பிறகு பேசிய மகேந்திரன், அரசின் செயல்பாடுகள் மக்களிடம் சேர்கிறதா என்பதை கண்டறிவதும் மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டுவது தான் எனது வேலை. பொறுப்பு முக்கியமில்லை. தலைவர் என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன். அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் கொங்கு மண்டலத்தில் திமுகவின் கோட்டை ஆக மாற்றுவது நிச்சயம். அதுவே எனது நோக்கம் என்று கூறியிருந்தார். பொறுப்பு வேண்டாம் என மகேந்திரன் கூறினாலும் அவருக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், திமுகவில் மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.