மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!

 

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!

தேசத்தந்தை மகாம்தா காந்தியின் கொள்ளு பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின். சமூக செயற்பட்டாளரான இவர் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார். இவர் மீது மகராஜ் என்ற தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக புகார் அளித்தார். சணல் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், அந்த ஆர்டருக்கான இறக்குமதி வரி செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும் லதா கூறியிருந்தார். அதற்காக சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி கடனாக வேண்டும் எனவும், வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வதாகவும் ஆசை காட்டியுள்ளார்.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!

சணல் ஒப்பந்தம் குறித்த ஆர்டர் காப்பி உள்ளிட்ட ஆவணங்களை மகராஜிடம் லதா காட்டியிருக்கிறார். அந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்று தெரியாமல் மகாராஜும் நம்பியுள்ளார். அதற்குப் பிறகு மகாராஜ் ஆஷிஷ் லதாவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதையடுத்து மகாராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!

வழக்கு ஆரம்பித்தபோது ஆஷிஷ் லதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர் குற்றவாளி என உறுதியானதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி. அவரது மகள் இலா காந்தி. மனித உரிமை ஆர்வலரான இவர் சமூக செயல்களுக்கான அமைதி விருதை பெற்றிருக்கிறார். 1994 முதல் 2004 வரை தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது கணவர் ராம்கோபின். இவர்களது மகள் தான் ஆஷிஷ் லதா ராம்கோபின்.