அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்?

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்?

அமெரிக்காவிலுள்ள ஒரு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்?
பூங்காவிலிருந்த காந்தி சிலை சேதமடைந்த பின்

சில ஆண்டுகளாவே அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்புக்குள்ளாவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, தலைநகர் வாசிங்டனில் ஏற்கனவே காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. தற்போது வடக்கு கலிபோர்னியா டேவிஸ் நகரிலுள்ள மத்திய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. 6 அடி உயரம், 294 கிலோ எடை கொண்ட இந்த வெண்கல சிலையை நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தியா அமெரிக்காவுக்கு பரிசளித்திருந்தது. அப்போதே சிலையை பூங்காவில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலுள்ள இந்திய சிறுபான்மையினர் அமைப்பு போரட்டம் நடத்தியுள்ளது. அந்த எதிர்ப்பையும் மீறி சிலை பூங்காவில் நிறுவப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி சிலை அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்?
வாசிங்டனிலிருந்த சிலை

சிலையைச் சேதப்படுத்திய நபர்கள் யார் என்று தெரியவில்லை என்றும், கால் மற்றும் தலை பகுதிகளில் சேதமடைந்துள்ள காந்தி சிலை பத்திரமாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்?

சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தடை இல்லை என்பதால் அங்கு இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இந்திய தலைவர்களை அவமதிக்கும் செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல இந்திய சிறுபான்மையினர் அமைப்பு பூங்காவிலிருந்த காந்தி சிலையை அகற்ற தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்?
பூங்காவிலிருந்து சிலை சேதமடைவதற்கு முன்

இருப்பினும், முழுக்க முழுக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது தான் சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனென்றால், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கொண்டாடும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்; பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்?
வாசிங்டன் காந்தி சிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

சில தினங்களுக்கு முன் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி நிறுவப்பட்டதையும் இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். இந்தியாவில் மீண்டும் காலிஸ்தான் இயக்கம் தலையெடுத்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே பிரிவினையால் தான் மகாத்மா காந்தி நாதுராம் கோட்சே என்ற இந்துவால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றுடன் 74 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.