இமயமலை வைஷ்ணவி தேவியை தரிசிக்க… 2,200 கி.மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்யும் மூதாட்டி..

இமயமலை வைஷ்ணவி தேவியை தரிசிக்க… 2,200 கி.மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்யும் மூதாட்டி..

மகாராஷ்டிராவை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் சைக்கிளில் 2,200 கி.மீட்டர் தொலைவில் உள்ள இமயமலையில் வீற்றிருக்கும் வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்வதற்காக பயணம் மேற்கொண்டு இருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கட்ரா மாவட்டம் கட்ராவில் பிரபலமான வைஷ்ணவி தேவி கோயில். இமயமலையில் அமைந்துள்ள குகை கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் மலை ஏறி வைஷ்ணவி தேவியை வழிபட்டு செல்கின்றனர். இந்த புனித யாத்திரை மேற்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் பல பக்தர்கள் தங்களது ஊர்களிலிருந்து வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நடந்தே வருவார்கள்.

இமயமலை வைஷ்ணவி தேவியை தரிசிக்க… 2,200 கி.மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்யும் மூதாட்டி..
சைக்கிளில் வைஷ்ணவி கோயில் செல்லும் பாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காம்காவ்ன் என்ற ஊரை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் 2,200 கி.மீட்டர் தொலைவில் உள்ள வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்வதற்காக தனியாக சைக்கிளில் கிளம்பி சென்று விட்டார். அந்த வயதான பெண்மணி எந்த அலுப்பும் இல்லாமல் சைக்கிள் செல்வதை பார்த்த ரத்தன் ஷர்தா என்பவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அதனை வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

இமயமலை வைஷ்ணவி தேவியை தரிசிக்க… 2,200 கி.மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்யும் மூதாட்டி..
சைக்கிளில் வைஷ்ணவி கோயில் செல்லும் பாட்டி

அந்த வீடியோவில் அந்த மூதாட்டி தான் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்று கொண்டு இருப்பதை சொல்கிறார். இந்த வீடீயோவை 1.59 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலர் அந்த மூதாட்டியின் தைரியத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினர். அதேசமயம் அவரது உறவினர்கள் அந்த வயதான பெண்மணிக்கு பயணத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து இருந்தனர்.