• February
    22
    Saturday

Main Area

Main



கணவன் கண்ணில் மிளகாய் பொடி தூவி, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி: பதற வைக்கும் சம்பவம்!

மாதிரிபடம்
மாதிரிபடம்

மும்பை: கணவரை கட்டி வைத்துத் தாக்கி, கண்ணில் மிளகாய் பொடியைத் தூவியதோடு கொதிக்கும் எண்ணெய்யை அவர் மீது ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர். 

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசிப்பவர் பவிஷ்யா புராஹோகைன். இவரது மனைவி குயின் சியா. இவரது நண்பரான நாயக் என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார், குயின் சியாவும் நாயக்கிற்கும் தவறான உறவு இருப்பதாக நினைத்த பவிஷ்யா மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதைப் பலமுறை மறுத்தும் பவிஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துள்ளது. 

murder

இது தொடர்பாக உறவினர்கள்  பேசி சமாதானம் செய்து வைத்தாலும் பவிஷ்யா மனைவி மீதான சந்தேகத்தை நிறுத்தவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பவிஷ்யா தூங்க சென்றுள்ளார். 

women

இதையடுத்து நாயக்கை வீட்டுக்கு அழைத்த குயின்சியா, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார். பின்னர் சுத்தியலை கொண்டு கணவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கண்களில் தூவியதோடு, கொதிக்கும் எண்ணெய்யைக் கொண்டு வந்து பவிஷ்யா மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறி துடித்துள்ளார். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த பவிஷ்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

crime

இதைத் தொடர்ந்து  நாயக்கையும் குயின்சியாவையும் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.