“போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்” 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

“போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்”  12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

“போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்”  12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

நாடு முழுவதும் கடந்த 31ஆம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

“போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்”  12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் தவறுதலாக சுகாதார ஊழியர்கள் சானிடைசரை கொடுத்துள்ளனர்.
இதில் குழந்தை ஒன்று வாந்தி எடுக்க, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

“போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்”  12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சுகாதார ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 12 குழந்தைகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.