நேற்று ஒரே நாளில் 3060 பேருக்கு கொரோனா.. சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா!

 

நேற்று ஒரே நாளில் 3060 பேருக்கு கொரோனா.. சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலேயே அதிக அளவு உயிரிழப்பு இருந்து வந்த நிலையில் அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்க முடியமால் உலக நாடுகள் திணறி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 3060 பேருக்கு கொரோனா.. சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா!

இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் தற்போது மகாராஷ்டிர மாநிலம் தாம் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 3,007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3060 ஆக இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவிய சீனாவிலேயே 83,040 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில், அதை விட மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.