காவலரை தாக்கிய வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிரா பெண் அமைச்சருக்கு சிறை.. உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி..

காவலரை தாக்கிய வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிரா பெண் அமைச்சருக்கு சிறை.. உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி..

காவலை தாக்கிய வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிரா பெண் அமைச்சர் யசோமதி தாக்கூருக்கு நீதிமன்றம் 3 மாதம் கடும் சிறை தண்டனை விதித்துள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் யசோமதி தாக்கூர். 8 ஆண்டுகளுக்கு முன்பு காவலரை தாக்கிய வழக்கில் யசோமதி தாக்கூருக்கு மாவட்ட நீதிமன்றம் 3 மாத கடும் சிறையும், அபராதம் விதித்துள்ளது. பா.ஜ.க. இந்த விவகாரத்தை எழுப்பும் என்பதால் உத்தவ் தாக்கரே அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காவலரை தாக்கிய வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிரா பெண் அமைச்சருக்கு சிறை.. உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி..
யசோமதி தாக்கூர்

2012 மார்ச் 24ம் தேதியன்று, அமராவதி மாவட்டம் ராஜபேத் காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட சுனபட்டி பகுதியில் மாலை 4.15 மணி அளவில் ஒரு வழிப்பாதையில் வந்த யசோமதி தாக்கூர் வாகனத்தை அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் நிறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த யசோமதி தாக்கூர், அவரது டிரைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் அந்த காவலரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

காவலரை தாக்கிய வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிரா பெண் அமைச்சருக்கு சிறை.. உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி..
நீதிமன்றம்

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காவலரை தாக்கிய வழக்கில் மாவட்ட நீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சர் யசோமதி தாக்கூர், மற்ற 3 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட நீதிபதி ஊர்மிளா ஜோஷி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கு 3 மாதம் கடும் சிறையும், அபராதமாக 4 பேரும் தலாக ரூ.15,500 செலுத்த வேண்டும் என்றும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.