விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை நாங்க எடுப்போம்.. மகாராஷ்டிரா அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல்

 

விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை நாங்க எடுப்போம்.. மகாராஷ்டிரா அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல்

விவசாயிகளுக்கு ஆதரவான முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் தொடர்பான மசோதாக்களுக்கு இந்த கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததால் அவை சட்டமாகின.

விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை நாங்க எடுப்போம்.. மகாராஷ்டிரா அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல்
பாலாசாகேப் பாட்டீல்

எனவே வேளாண் சட்டங்களை மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்கள் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தவிர்க்க மாநிலத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மகாராஷ்டிராவின் கூட்டுறவு துறை அமைச்சருமான பாலாசாகேப் பாட்டீல் கூறியதாவது:

விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை நாங்க எடுப்போம்.. மகாராஷ்டிரா அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல்
விவசாயி

மத்திய அரசுக்கு சட்டங்களை உருவாக்க உரிமை உள்ளது போல் மாநிலங்களுக்கும் சட்டங்களுக்கும் உருவாக்கக்கூடிய வழி உள்ளது. வேளாண் உற்பத்தி சந்தை குழுக்கள் (ஏபிஎம்சி) தொடர்பான மத்திய அரசு சட்டங்களை உருவாக்கியுள்ளது, விவசாயிகளுக்கு ஆதரவான முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்று எங்கள் தலைவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிரா அரசாங்கம் தனது அனைத்து வேளாண் உற்பத்தி சந்தை குழுக்களுக்கும் வேளாண் அவசர சட்டங்களை அமல்படுத்துவதற்காக அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று சிவ சேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தது.