வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்தியில் தங்கத்தில் மாஸ்க்: ரூ.2.89 லட்சம் செலவு செய்த நபரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்தியில் தங்கத்தில் மாஸ்க்: ரூ.2.89 லட்சம்  செலவு செய்த நபரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் மத்திய , மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முக்கியமாக பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்தியில் தங்கத்தில் மாஸ்க்: ரூ.2.89 லட்சம்  செலவு செய்த நபரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

முக்கியமாக கொரோனாவை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என பலரும் அறிவுறுத்தி வரும் நிலையில் மாஸ்க் விற்பனை மற்றும் அதன் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. பலரும் அவரவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாஸ்க் அணிந்து வருகின்றனர். மாஸ்க் அணிதல் உயிரைக் காப்பாற்ற தேவையான ஒன்று என்பதை தாண்டி அது தற்போது ஸ்டைலான ஒன்றாகவும் மாறி உள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்தியில் தங்கத்தில் மாஸ்க்: ரூ.2.89 லட்சம்  செலவு செய்த நபரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்க மாஸ்க் அணிந்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புனே பகுதியை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். பொதுவாகவே தங்கம் மீது ஆர்வம் கொண்ட இவர் தங்கத்திலான மாஸ்க்கை தயாரித்து அணிந்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 2.89 லட்சம். மாஸ் கில் சிறுசிறு துளைகள் இருப்பதால் சுவாசிப்பதில் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ள இவர் தங்க மாஸ்க்கில் இருந்து தன்னைக் காப்பாற்றுமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வரும் நிலையில் மாஸ்கை தங்கத்தில் அணிந்துள்ள ஷங்கர் குரேட்டை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.