“உச்சக்கட்ட பரபரப்பு” ரூ.100 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா!

 

“உச்சக்கட்ட பரபரப்பு” ரூ.100 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா!

முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அந்தக் காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏவும் விசாரித்து வருகின்றன.

“உச்சக்கட்ட பரபரப்பு” ரூ.100 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா!

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிந்தது. அந்த காரை காவல் அதிகாரி சச்சின் வாஸ் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13ஆம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் கடந்த 18ஆம் தேதி ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

“உச்சக்கட்ட பரபரப்பு” ரூ.100 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா!
பரம்பீர் சிங், அனில் தேஷ்முக், சச்சின் வாஸ்

இதையடுத்து பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், “தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“உச்சக்கட்ட பரபரப்பு” ரூ.100 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா!

மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய இந்த விவகாரத்தை பாஜக கையிலெடுக்க, உயர் நீதிமன்றம் தலையிட்டது. இத்தகைய பரப்பான சூழலில் இதுகுறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அனில் தேஷ்முக். இதனால் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவு ஏற்படாலாம் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருவது கவனிக்கத்தக்கது. இதைக் காரணம் காட்டி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய எதிர்க்கட்சியான பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.