சி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் பா.ஜ.க.

 

சி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியள்ளது.

சி.பி.ஐ. விசாரணைக்கான ஒப்புதலை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றதை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சி.பி.ஐ. தவறாக பயன்படுத்தபடுவதாக பேச்சு வந்தது. சி.பி.ஐ. ஒரு தொழில்முறை மற்றும் முதன்மை விசாரணை அமைப்பு. டி.ஆர்.பி. வழக்கு மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்ற வழக்கு உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஒரு சூழ்ச்சி இருக்கலாம். சி.பி.ஐ. அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

சி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் பா.ஜ.க.
அனில் தேஷ் முக்

சி.பி.ஐ. விவகாரம் தொடர்பாக சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கூறியதாவது: தேசிய விவகாரம் என்றால் அதனை விசாரிக்க சி.பி.ஐ.க்கு அதிகாரம் உள்ளது. மாநிலத்தில் எங்களது போலீசாரால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் தலையிட்டதால் நாங்கள் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது.அரசியலமைப்பின்படி, மகாராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறைக்கு சொந்தமாக உரிமைகள் உள்ளது. இந்த உரிமைகளை யாராவது இந்த உரிமைகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்றால், அரசாங்கம் அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் பா.ஜ.க.
சஞ்சய் ரவுத்

முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மகாராஷ்டிராவில் சி.பி.ஐ.க்கு தடைபோடும் வேளையில், பா.ஜ.க.வோ பால்கர் கும்பல்கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 16ம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் துறவிகளை ஒரு கும்பல் அடித்து கொன்றது. இந்த வழக்கை மகாராஷ்டிரா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கைதான் தற்போது சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.