‘ஆக்சிஜனுக்காக மத்திய அரசு காலில் விழவும் தயார்’

 

‘ஆக்சிஜனுக்காக மத்திய அரசு காலில் விழவும் தயார்’

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற புதிய பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

‘ஆக்சிஜனுக்காக மத்திய அரசு காலில் விழவும் தயார்’

இதனால் அந்தந்த மாநில அரசுகள் செய்வதறியாது திணறி வருகிறது. குறிப்பாக மும்பை அருகே உள்ள நாலச்சோப்ராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் நாசிக் அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் பலியாகினர். இதனால் மகாராஷ்டிரா அரசு மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்கிறது.

‘ஆக்சிஜனுக்காக மத்திய அரசு காலில் விழவும் தயார்’

இந்த நிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, “நோயாளிகளின் உயிரைக் காக்க மகாராஷ்டிர அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த தருணத்தில் மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும். மருத்துவ தேவையான ஆக்சிஜனை பெற மத்திய அரசின் காலில் விழுவதற்கு கூட மகாராஷ்டிரா அரசு தயாராக உள்ளது. ஆக்சிஜன் விநியோக உரிமை மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே போதிய ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.