அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கும் மகாராஷ்டிரா அரசு

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கும் மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், லாக்டவுனை அரசு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை மிகவும் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நம் நாட்டில் மகாராஷ்டிரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்க பல்வேறு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு எடுத்தது. இருப்பினும் அங்கு இன்னும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தமாதிரி தெரியவில்லை.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கும் மகாராஷ்டிரா அரசு
கொரோனா வைரஸ்

இந்நிலையில் அண்மையில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை அறிவித்தது மேலும் கடந்த 22ம் தேதி இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வந்த கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் மே 1ம் தேதி காலை 7 மணி வரை தொடரும் என அம்மாநில அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுனை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கும் மகாராஷ்டிரா அரசு
ராஜேஷ் தோபே

இந்த கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ராஜேஷ் தோபே செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் லாக்டவுனை மேலும் 15 தினங்கள் நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். லாக்டவுனை மேலும் 15 தினங்களுக்கு மாநில அரசு நீட்டிக்கும் என தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பை மகாராஷ்டிரா அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.