பாஜகவின் மிரட்டலால் சச்சின் ட்வீட் செய்தாரா? – விசாரணைக்கு மகா. அரசு உத்தரவு!

பாஜகவின் மிரட்டலால் சச்சின் ட்வீட் செய்தாரா? – விசாரணைக்கு மகா. அரசு உத்தரவு!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார். இது சர்வதேச அளவில் ஆதரவைப் பெற்றாலும் இந்திய அரசுக்கு எதிராக அமைந்தது. ரிஹானாவின் ட்வீட்டை எதிர்த்து சச்சின் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் லதா மங்கேஷ்கர் போன்ற திரைப் பிரபலங்களும் ட்வீட் செய்தனர். அனைவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து ட்வீட் செய்திருந்தனர். அவர்களின் ட்வீட்டிலிருந்த உட்பொருளும் ஒரே மாதிரியாக இருந்தது. குறிப்பாக, ஒரு ஐந்தாறு பேர் ‘Amicable’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் தங்களது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

பாஜகவின் மிரட்டலால் சச்சின் ட்வீட் செய்தாரா? – விசாரணைக்கு மகா. அரசு உத்தரவு!

இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. சர்வதேச பிரபலங்களுக்கு எதிராக இந்தியப் பிரபலங்களைக் மத்திய அரசு களமிறக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, அனைவரையும் மிரட்டி ட்வீட் போட வைத்ததாகவும் பாஜக மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பாஜகவின் மிரட்டலால் சச்சின் ட்வீட் செய்தாரா? – விசாரணைக்கு மகா. அரசு உத்தரவு!

இச்சூழலில், சச்சின், லதா மங்கேஷ்கர் பாஜகவின் அழுத்தத்தின் பேரில் ட்வீட் செய்தார்களா என்பது குறித்து விசாரிக்க மகாராஷ்டிர உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதிசெய்தார். இந்த விசாரணையின் மூலம் பல்வேறு ரகசியங்கள் அம்பலமாகும் என அவர் தெரிவித்திருக்கிறார்.