இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் தளர்வுகள் அறிவிப்பு!

 

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் தளர்வுகள் அறிவிப்பு!

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன. மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,454 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,619 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8,822பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் தளர்வுகள் அறிவிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 6-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது ர்ன காங்கிரசை சேர்ந்த அமைச்சர் சகன் புஜ்பால் தெரிவித்தார். இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் கெஸ்ட் ஹவுஸ், தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை சில கட்டுப்பாடுகளுடன் 8ஆம் தேதி முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கட்டுபாட்டு மண்டலங்களை தவிர பிற இடங்களிலுள்ள நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.