சீனாவை பொருளாதார ரீதியில் அடிக்க தொடங்கிய இந்தியா… சீன திட்டங்களை முடக்கிய மகாராஷ்டிரா அரசு

 

சீனாவை பொருளாதார ரீதியில் அடிக்க தொடங்கிய இந்தியா… சீன திட்டங்களை முடக்கிய மகாராஷ்டிரா அரசு

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டியபோது இரு தரப்பும் மோதி கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வு நாட்டு மக்களிடம் நிலவுகிறது.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு சேவையை 4ஜி சேவையாக மேம்படுத்துவதற்கான டெண்டரில் சீன நிறுவனங்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான 3 சீன நிறுவனங்களின் திட்டங்களை முடக்கியுள்ளது.

சீனாவை பொருளாதார ரீதியில் அடிக்க தொடங்கிய இந்தியா… சீன திட்டங்களை முடக்கிய மகாராஷ்டிரா அரசுகடந்த வாரம் ஆன்லைன் வாயிலாக மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை அம்மாநில அரசு நடத்தியது. அந்த மாநாட்டில், மகாராஷ்டிராவில் முதலீடு செய்வது தொடர்பாக மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் 3 சீன நிறுவனங்களின் மொத்தம் ரூ.5 அயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான 3 திட்டங்களும் அடங்கும். தற்போது அந்த 3 சீன திட்டங்களையும்தான் மகாராஷ்டிரா அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறுகையில், மத்திய அரசுடன் ஆலோசனை செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கல்வான் பள்ளதாக்கு சம்பவம் நடப்பதற்கு முன் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சீன நிறுவனங்களுடன் மேற்கொண்டு எந்தவித ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என தெரிவித்தார்.