அலுவலக பணிகளில் மராத்தியை பயன்படுத்துங்க.. இல்லைன்னா சம்பள உயர்வு கட்.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு மராத்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து துறைகள், உள்ளூர் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ பணிகளில் மராத்தி மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மராத்தி

மகாராஷ்டிரா அரசின் மராத்தி மொழி துறை தொடர்பாக அனைத்து துறைகளுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அனைத்து துறைகள், உள்ளூர் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ பணிகளில் மராத்தி மொழியை பயன்படுத்துவது கட்டாயம். பல துறைகள் இன்னும் ஆங்கில மொழியில் சுற்றறிக்கை, அரசாங்க தீர்மானங்களை வெளியிடுகின்றன. பல துறைகளின் வலைத்தளங்களும் ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளன. இதேபோல் பல நகராட்சி கார்ப்பரேஷன்கள் அறிவிப்புகள், கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் மாதிரிகளை ஆங்கிலத்தில் வெளியிடுகின்றன. மக்கள் பிரநிதிகள் இதுதொடர்பாக அடிக்கடி புகார்கள் அளிக்கின்றனர்.

அரசு அலுவலகம்

உத்தியோகப்பூர்வ பணிகளில் வேண்டும் என்றே மராத்தி மொழியை பயன்படுத்தவில்லை என கண்டறியப்பட்ட பணியாளர்களுக்கு தண்டனையாக, எச்சரிக்கை, ரகசிய அறிக்கைகளில் குறிப்பிடுவது, கண்டிப்புகளை வெளியிடுவது மற்றும் வருடாந்திர சம்பள அதிகரிப்பை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து அரசு தலைவர்களையும் மாநில அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!