முதலில் அடம் பிடித்த உத்தவ் தாக்கரே…. திடீரென மனம் மாறி விமான போக்குவரத்துக்கு அனுமதி…

முதலில் அடம் பிடித்த உத்தவ் தாக்கரே…. திடீரென மனம் மாறி விமான போக்குவரத்துக்கு அனுமதி…

கடந்த சில தினங்களுக்கு முன், மே 25ம் தேதி (இன்று) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து விமான சேவை நிறுவனங்கள் மீண்டும் சேவையை தொடங்குவதற்கான காரியங்களில் இறங்கின. இந்நிலையில், மகாராஷ்டிராவும், சத்தீஸ்கரும் உள்நாட்டு விமான சேவையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்தன.

முதலில் அடம் பிடித்த உத்தவ் தாக்கரே…. திடீரென மனம் மாறி விமான போக்குவரத்துக்கு அனுமதி…

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை குறிப்பிடடு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று காலை வரை உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் மகாராஷ்டிராவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கும்படி விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடமும் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தார்.

முதலில் அடம் பிடித்த உத்தவ் தாக்கரே…. திடீரென மனம் மாறி விமான போக்குவரத்துக்கு அனுமதி…

இதனால் மகாராஷ்டிராவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை மீண்டும் காலதாமதமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், மும்பையில் தினமும் 25 விமானங்கள் கிளம்பவும், 25 விமானங்கள் தரையிறங்கவும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். இது தொடர்பான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மாநில அரசு விரைவில் வெளியிடும் என தெரிவித்தார்.