சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்

சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்

மகராஷ்டிராவில் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க அளித்து இருந்த ஒப்புதலை முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு திரும்பபெற்றுள்ளது. மேலும் இங்கு வழக்குகளை விசாரிக்க முதலில் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு மாநில அரசுகள் பொது சம்மதம் அளித்துள்ளன. அதன்படி, மாநிலங்களில் எந்தவொரு வழக்கையும் சி.பி.ஐ.யால் விசாரணை நடத்த முடியும். அண்மையில், பா.ஜ.க. ஆட்சி அல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் சி.பி.ஐ. விசாரணை செய்ய அளித்து இருந்த பொது சம்மத்தை திரும்ப பெற்றன. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சி.பி.ஐ.வை மத்திய அரசு பயன்படுத்துவதாக கூறி பொது சம்மத்தை அந்த மாநில அரசுகள் திரும்ப பெற்றன.

சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

தற்போது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசும், விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கொடுத்து இருந்த பொது சம்மதத்தை திரும்ப பெற்றுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் எந்தவொரு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்றாலும் முதலில் அம்மாநில அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பின்பே சி.பி.ஐ.யால் வழக்க விசாரணையை தொடங்க முடியும். தற்போது சி.பி.ஐ. விசாரித்து வரும் வழக்குகளுக்கு இது பொருந்தாது.

சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்
சி.பி.ஐ.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ காவல் நிலையத்தில் டி.ஆர்.பி. மோசடி தொடர்பாக விளம்பர நிறுவனம் ஒன்று புகார் கொடுத்தது. இதனையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அம்மாநில போலீஸ் பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக டி.ஆர்.பி. வழக்கில் எப்.ஐ.ஆரை சி.பி.ஐ. பதிவு செய்தது. சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்த அதற்கு அடுத்த நாளில் மகாராஷ்டிரா அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு அளித்து இருந்த பொது சம்மத்தை திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.