ஆக்சிஜன் வாயு கசிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5லட்சம் நிதியுதவி

 

ஆக்சிஜன் வாயு கசிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5லட்சம் நிதியுதவி

மகாராஷ்ட்ராவில் நாசிக் நகரிலுள்ள ஜாகிர் உசைன் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் வாயு கசிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5லட்சம் நிதியுதவி

மருத்துவமனைக்கு லாரிமூலம் ஆக்சிஜன் கொர்ண்டுவரப்பட்டது. லாரியிலிருந்து மருத்துவமனையிலுள்ள டேங்கிற்கு ஆக்சிஜனை மாற்றும் போது திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் டேங்கரிலிருந்து வாயு கசிந்தது. இதனால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு அரை அணி நேரத்திற்கு மேலாக ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் நடந்தது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என கவலை தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே. உயிரிழந்த 24 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.