மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் பதவி ரூ.2 கோடி வரை ஏலம்… தேர்தலை ரத்து செய்த ஆணையர்

மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் பதவி ரூ.2 கோடி வரை ஏலம்… தேர்தலை ரத்து செய்த ஆணையர்

மகாராஷ்டிராவில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ரூ.2 கோடி வரை ஏலம் விடப்பட்ட தகவல் தெரியவந்ததையடுத்து சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கான தேர்தலை அம்மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள உம்ரேன் கிராமத்திலும், நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள கோண்டமாலி கிராமத்திலும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலை நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்த சூழ்நிலையில், இந்த கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏலம் விடப்பட்ட தகவல் வெளியே தெரிந்தது.

மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் பதவி ரூ.2 கோடி வரை ஏலம்… தேர்தலை ரத்து செய்த ஆணையர்
ஏலத்தில் பங்கேற்ற மக்கள்

உம்ரேன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆரம்ப ஏல விலை ரூ.1.1 கோடி என நிர்ணயம் செய்துள்ளனர். கடைசியில் ரூ.2 கோடிக்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஏலம் முடிந்துள்ளது. கோண்டமாலி கிராம தலைவர் பதவி ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலம் தொடர்பாக வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோக்களை அந்த தேர்தலில் போட்டியிட விரும்பிய நபர்கள் அது முடியாமல் போனதால் வெளியே கசிய விட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் பதவி ரூ.2 கோடி வரை ஏலம்… தேர்தலை ரத்து செய்த ஆணையர்
மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையர் மதன்

இதனையடுத்து ஏலம் தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையர் மதன் அந்த கிராமங்களில் நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், ஏலத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அறிக்கை அளிக்கும்படி அந்த இரண்டு மாவட்ட கலெக்டர்களுக்கும் தேர்தல் ஆணையர் மதன் உத்தரவிட்டுள்ளார்.