மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 139பேர் கொரோனாவுக்கு பலி!

 

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 139பேர் கொரோனாவுக்கு பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகி தனது வேலையை காட்ட தொடங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் விதிக்கப்படும் என அச்சம் எழுந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அம்மாநிலத்தில் புதிதாக 36,902 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்ததையடுத்து கடந்த 28 ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 139பேர் கொரோனாவுக்கு பலி!

இந்தியாவிலே தினசரி கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 27,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 3,40,542பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 23,77,127 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 139 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை 54,422பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.