மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

 

மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி விட்டது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்ட்ரா தான் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் தொற்று நோயான கொரோனா வைரஸ் தனது ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் ஒரு லட்சத்து 1,141 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த தொற்றுநோய்க்கு3,590 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் பொதுமுடக்க நீட்டிக்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என்றும் மக்கள் எங்கும் கூட்டம் கூடாமல் அரசு கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.