லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் மாநிலத்தில் எங்கும் நீக்கப்படவில்லை.. மகாராஷ்டிரா அரசு தகவல்

லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் மாநிலத்தில் எங்கும் நீக்கப்படவில்லை.. மகாராஷ்டிரா அரசு தகவல்

மகாராஷ்டிராவில் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும் நீக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து விட்டதால், 5 கட்டங்களாக லாக்டவுனை நீக்கும் திட்டத்தை அம்மாநில அரசு தயாரித்துள்ளதாக பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விஜய் வதேட்டிவா லாக்டவுன் தளர்வு குறித்து கூறுகையில், ஜூன் 4ம் தேதி முதல் மாநிலத்தில் 36 மாவட்டங்களில் 18-ல் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் மாநிலத்தில் எங்கும் நீக்கப்படவில்லை.. மகாராஷ்டிரா அரசு தகவல்

கோவிட் நேர்மறை விகிதம் 5 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக உள்ள மாவட்டங்களிலும், ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாடு 25 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் பின்னர், கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஒப்புதல் கொள்கையளவில் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விஜய் வதேட்டிவா விளக்கம் கொடுத்தார்.

லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் மாநிலத்தில் எங்கும் நீக்கப்படவில்லை.. மகாராஷ்டிரா அரசு தகவல்
லாக்டவுன்

இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் மாநிலத்தில் எங்கும் நீக்கப்படவில்லை. கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.