அமைச்சர்களின் லாக்டவுன் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அமைச்சர்களின் லாக்டவுன் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்ற அம்மாநில அமைச்சர்களின் கோரிக்கையை முதல்வர் உத்தவ் தாக்கரே நிராகரித்து விட்டார். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், மகாராஷ்டிரா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவி தொடங்கிய காலம் முதல் இதுவரையிலான காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் அம்மாநிலத்தில் 568 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 67,468 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

அமைச்சர்களின் லாக்டவுன் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இரவு ஊரடங்கு (கோப்புப்படம்)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, வார இறுதி லாக்டவுன் மற்றும் இரவு ஊரடங்கு அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் உத்தவ் தாக்கரே எடுத்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து கொரோனாவால் மாநிலத்தின் நிலைமை மோசமாகி வருவதால் லாக்டவுன் விதிக்கும்படி அம்மாநில அமைச்சர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் அம்மாநிலத்தில் லாக்டவுன் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமைச்சர்களின் லாக்டவுன் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
திருமணம்

ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ஆனால் அதற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். புதிய வழிகாட்டுதல்கள்படி,அரசு அலுவலகங்கள் 15 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு உள்ளவர்கள், மருத்து சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டுமே லோக்கல் மற்றும் மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்த அனுமதி, திருமண நிகழ்ச்சியை அதிகபட்சம் 25 நபர்களுடன் ஒரே ஹாலில் 2 மணி நேரத்துக்குள் நடத்தி கொள்ளலாம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.