மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியிலிருந்த ஜிலானி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் 4 ஆம் நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 50ற்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கி கொண்ட நிலையில் 20ற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திராகாந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

இந்நிலையில் அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டடம் வாழத் தகுதியற்றது என்று பிவாண்டி – நிசாம்பூர் மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கை மீறி வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில நகர மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.