கலாமை குடியரசு தலைவராக ஆக்கியது மோடிதான்.. பா.ஜ.க. தலைவர்.. சொல்லுங்க.. கொஞ்சம் நம்பற மாதிரி சொல்லுங்க

கலாமை குடியரசு தலைவராக ஆக்கியது மோடிதான்.. பா.ஜ.க. தலைவர்.. சொல்லுங்க.. கொஞ்சம் நம்பற மாதிரி சொல்லுங்க

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை குடியரசு தலைவராக ஆக்கியது பிரதமர் மோடி தான் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சந்திரகாந்த் பாட்டீல். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அனைத்து முஸ்லிம்களுக்கும் இடம் அளித்துள்ளார். அப்துல் கலாமையும் அவர்தான் குடியரசு தலைவராக ஆக்கினார். முஸ்லிம் என்பதற்காக அவர் குடியரசு தலைவராக்கில்லை ஆனால் திறமையான விஞ்ஞானி என்பதற்காக கலாமை குடியரசு தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கலாமை குடியரசு தலைவராக ஆக்கியது மோடிதான்.. பா.ஜ.க. தலைவர்.. சொல்லுங்க.. கொஞ்சம் நம்பற மாதிரி சொல்லுங்க
சந்திரகாந்த் பாட்டீல்

சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, வீர் சாவர்க்கர் மற்றும் வாஜ்பாய் போன்ற சிறந்த ஆளுமைகளின் செயல்களை இளைய தலைமுறையினர் புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய சமூகத்தில் பல பிரச்சினைகள், கேள்விகள் உள்ளன. இந்த சிக்கல்களை தீர்க்க இளைஞர்கள் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலாமை குடியரசு தலைவராக ஆக்கியது மோடிதான்.. பா.ஜ.க. தலைவர்.. சொல்லுங்க.. கொஞ்சம் நம்பற மாதிரி சொல்லுங்க
பிரதமர் மோடி

2002ம் ஆண்டில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை குடியரசு தலைவராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். மேலும், மத்தியில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சிதான் இருந்தது. அதே காலத்தில் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தார். ஆக, அப்துல் கலாமை குடியரசு தலைவராக மோடிதான் நியமனம் செய்தார் என்று சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருப்பது நெருடலாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர்.