தனிமைப்படுத்துதல் முகாமில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை!

 

தனிமைப்படுத்துதல் முகாமில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை!

மகாராஷ்ட்ர மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்த பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. காரணம், கொரோனா வைரஸ் தொற்றின் பயம் ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி வருகிறது. நேரக்கட்டுபாடுகள், பொருளதார பின்னடைவு உள்ளிட்ட பல காரணங்களால் பலர் வேலையை இழந்துள்ளனர். வருமானமின்றி தவிக்கும் அந்தக் குடும்பங்கள் கொரோனா என்று ஒழியும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செயல்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் ஒரு புறம் இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருப்பதால் குற்றச்செயல்களும் அதிகரித்துவருகின்றன

தனிமைப்படுத்துதல் முகாமில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் 40 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400க்கும் அதிகமானோர் அங்குள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .இங்கு கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயது பெண்மணி, தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்துள்ளனர்