Home ஆன்மிகம் மஹாளய பட்ச துவாதசி திதியில் முன்னோர்களை வழிப்பட்டால் தங்கம், ஆபரணம் ஆடைகள் வாங்கலாம்!

மஹாளய பட்ச துவாதசி திதியில் முன்னோர்களை வழிப்பட்டால் தங்கம், ஆபரணம் ஆடைகள் வாங்கலாம்!

மஹாளய பட்ச காலத்தில் வரும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. மஹாளய பட்ச துவாதசி திதியில் முன்னோர்களை வழிபட்டால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், தங்க நகைகள் சேர்க்கவும், இந்த உலகில் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவும் நம் முன்னோர்கள் ஆசி வழங்குகிறார்கள்.

‘மஹாளயம்’ என்றால் ‘பெரிய கூட்டம்’ என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே மஹாளய பட்சமாகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மஹாளய பட்சமாகும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நாம செய்யக்கூடிய தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம்.

மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம்ம வீடு தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம்ம வீட்டில் வந்திருப்பதாக நம்பிக்கை.

இந்த பதினைந்து நாட்களும் நம் வீட்டை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி. இந்த 15 நாட்களும் நம்மை காண வரும் முன்னோர்களுக்கு நாம் திதி தர்ப்பணம் அளிக்கலாம். நம்மால் இயன்ற தான தர்மம் செய்ய வேண்டும்.
இன்று மஹாளய பட்சத்தின் பனிரெண்டாம் நாளான இன்று துவாதசி திதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், விலை உயர்ந்த நகை, ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். மஹாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல.


நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம். இந்த மகாளய பட்ச நாட்களில் மறைந்த நம் முன்னோர்களை நினைத்து தான தர்மங்களை, செய்து நாம் நம் தலைமுறைக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்வோம்.

-வித்யா ராஜா

Most Popular

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...
Do NOT follow this link or you will be banned from the site!