உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் ஏற்றப்பட்ட மகாதீபம்

உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில்  ஏற்றப்பட்ட மகாதீபம்

திருச்சி

கார்த்திகை தீபத்தையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, உச்சி பிள்ளையார் கோவில் முன்பாக இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி, 30 மீட்டர் அளவுள்ள மெகா திரி வைக்கப்பட்டிருந்து.

உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில்  ஏற்றப்பட்ட மகாதீபம்

தொடர்ந்து, மாலை 5.45 மணி அளவில் தாயுமானவ்ர் சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, மங்கள வாத்தியங்களுடன், உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சரியாக 6 மணி அளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள், ஓதுவார்கள், இந்து சமய அறநிலையத் துறையினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக , கோயிலுக்கு இன்று மதியம் 3 மணிக்கு மேல் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில்  ஏற்றப்பட்ட மகாதீபம்

இதனால் பக்தர்கள் தங்களின் வீடுகளின் மாடியில் இருந்தும், சாலைகளில் நின்றவாறும் சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே இன்று மாலை ஏற்பட்ட மகா தீபம், தொடர்ந்து 3 நாட்கள் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.