darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



ஹைடெக்கா மாறுது மகாபலிபுரம்!  மோடி வர்றதால வாகனங்கள் நுழைய தடை!

மாமல்லபுரம்,மோடி
மாமல்லபுரம்,மோடி

இந்தியாவின் பிரதமார பதவியேற்பதற்கு முன்னால், அமெரிக்காவிற்கு செல்ல மோடி முயன்றபோதெல்லாம் விசா கிடைக்காமல் இருந்திருக்கிறது. அதே போல், இந்தியாவின் பிற மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தாலும், வலுவாக தனது வேர்களை இறக்கினாலும், ஆரம்ப காலங்களில் இருந்தே அதிதீவிரமாய் ‘கோ பேக் மோடி’ கோஷம் தமிழகம் முழுவதுமே எதிரொலித்து கொண்டிருக்கிறது.

modi

எத்தனைப் பேர் என்னை ‘கோ பேக்’ என்று சொன்னாலும், திரும்ப திரும்ப தமிழகத்துக்கு வந்துக்கிட்டே தான் இருப்பேன் என்று மோடி நினைத்திருப்பார் போல...
நட்பு ரீதியாக இந்தியாவிற்கு வருகைத் தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் நமது பிரதமர் மோடி இருவரும் இம்மாதம் 12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில் இந்த இரு தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த பதினைந்து நாட்களாகவே மகாபலிபுரம் ஹை டெக்காக மாறுதல் அடைந்து வருகிறது. கொரியன் க்ராஸ் முழுவதுமாக பதிக்கப்பட்டு, மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்கிறது. புது சாலைகள் மகாபலிபுரம் கடற்கரை அருகே மின்னுகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் நுழைவதற்கு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தகவல் தெரியாமல் வாகனங்களில் வந்தவர்கள் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டார்கள். உள்ளூர் பொதுமக்களும், மகாபலிபுரத்தைக் கடந்து பாண்டிச்சேரி செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மாமல்லபுரம் நுழைவாயிலிருந்து நடை பயணமாக செல்லவே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 

mamallapuram

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகருக்குள் இருந்த பேருந்து நிலையம் மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு வாரகாலமாக மாமல்லபுரம் நகரத்திற்குள் செல்லும் வாகனங்களையும் போலீசார் முழு சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.