அந்தமான் தீவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1ஆக பதிவு!

 

அந்தமான் தீவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1ஆக பதிவு!

வட மாநிலங்களில் சில மாதங்களாக சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றன. ஜூலை மாத தொடக்கத்தில் ஹரியானாவிலுள்ள ஜஜ்ஜாரிலும் குஜராத்திலுள்ள கட்ச் பகுதியிலும் குறைவான தீவிரம் கொண்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பெரிய அளவிலான உயிர் சேதம் விளைவிக்கக் கூடிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

அந்தமான் தீவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1ஆக பதிவு!

இதனிடையே ஜூலை 21ஆம் தேதி 1 மணி நேரத்தில் மூன்று மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேகலாயா மாநிலத்தில் அதிகாலை 2.10 மணிக்கு ரிக்டர் அளவில் 4.1 நிலநடுக்கம், அதிகாலை 4.57 மணிக்கு லடாக்கிலுள்ள லே பகுதியில் 3.6 ரிக்டர் நிலநடுக்கம், அதிகாலை 5.24 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம் என அடுத்தடுத்து உணரப்பட்டன.

அந்தமான் தீவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1ஆக பதிவு!

இச்சூழலில் இன்றுன் அந்தமான் நிக்கோபர் தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம். போர்ட் பிளேரில் இன்று காலை 6.27 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இது நடந்த அடுத்த சில மணிநேரங்களில் காலை 9 மணியளவில் போர்ட் பிளேரில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக எதுவும் தெரியவில்லை.