ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு!

 

ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு!

தருமபுரி

ஓகேனக்கல் அருகே வனப்பகுதியில் வயிற்று கோளாறு காரணமாக 20 வயது மதிக்கத்தக்க மக்னா ஆயானை உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட சின்னாறு முத்தூர்பட்டி வனப் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, வனத்துறையினர் அங்கு மக்னா யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். இதுகுறித்து அவர்கள், ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் அளித்தனர்.

ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு!

தகவலின் அடிப்படையில், வனச்சரகர் ராஜ்குமார், கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த யானையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவக் குழுவினர் யானைக்கு பிரேத பரிசோதனை மோற்கொண்டு, அதே இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம், குழிதோண்டி அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரகள், உயிரிழந்த மக்னா யானைக்கு சுமார் 20 வயது இருக்கும் என்றும், வயிற்றுக் கோளாறு காரணமாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும், கடுமையான வெயில் காரணமாகவும் யானை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.